குருகிராம் – 5 நவம்பர், 2026 உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு கோபுர உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான இண்டஸ் டவர்ஸ் லிமிடெட், இந்தியா முழுவதும் சூரியசக்தியால் இயங்கும் 50,000 தொலைத்தொடர்பு மையங்களை நிறுவியிருக்கிறது. தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புத் துறையில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம் என்ற உலகளாவிய சாதனையை இதன்மூலம் அது படைத்துள்ளது. இனிவரும் காலங்களில், தனது சூரியசக்தி கட்டமைப்பை 1,00,000 தொலைத்தொடர்பு மையங்களாக விரிவுபடுத்த இலக்கு நிர்ணயித்துள்ள இண்டஸ் டவர்ஸ், நிலைப்புத்தன்மையுள்ள தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பில் தனது தலைமை இடத்தை இதன்மூலம் மேலும் வலுப்படுத்தவிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக சுமார் 300 மெகாவாட் நிறுவப்பட்ட சூரியசக்தி திறன் வசதிகளுடன், தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புத் துறையில் விநியோகிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க மிகப்பெரிய ஆற்றல் சூழல் அமைப்புகளில் ஒன்றை இத்திட்டம் உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, இதன் சுற்றுச்சூழல் தாக்கம் என்பது சுமார் 2 கோடி மரங்களை நட்டு பராமரிப்பதற்கு சமமானது. மேலும், வழக்கமான எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் ஆண்டிற்குச் சுமார் 4,20,000 டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் இது உதவுகிறது.
இந்த உலகளாவிய சாதனை அளவுகோலை நிறுவியது குறித்து இண்டஸ் டவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (MD & CEO) பிரச்சூர் ஷா கூறுகையில், “கிட்டத்தட்ட 300 மெகாவாட் திறனுடன் சூரியசக்தியால் இயங்கும் 50,000 தொலைத்தொடர்பு மையங்கள் என்ற இலக்கை அடைவதென்பது, வெறும் செயல்பாட்டு ரீதியிலான சாதனை மட்டுமல்ல; நிலைப்புத்தன்மையுள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இந்த அளவை எட்டிய முதல் பேசிவ் உள்கட்டமைப்பு நிறுவனம் என்ற வகையில், புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவை ஒன்றிணைந்து இத்துறைக்கும், சுற்றுச்சூழலுக்கும் அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வ தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். 2024-ல் எங்கள் சூரியசக்தி திட்டத்தை வேகப்படுத்திய குறுகிய காலத்திலேயே, தூய்மையான ஆற்றலை வழங்குதல், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் வலையமைப்பின் மீள்திறனை வலுவாக்கல் ஆகியவற்றின் மூலம் தொலைத்தொடர்பு துறையில் விநியோகிக்கப்பட்ட சூரியசக்தி அமைப்புகளில் மிகப்பெரிய சூழலமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
பொறுப்பான வளர்ச்சிக்கான எங்களது அர்ப்பணிப்பை இந்த சாதனை பிரதிபலிக்கிறது. ஆற்றல் செலவை மேலும் குறைக்கும் அதே வேளையில், 1,00,000 தொலைத்தொடர்பு மையங்களை சூரியசக்தி மூலம் இயக்குவதையும், நிலையான டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கான புதிய தரஅளவுகோல்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். முக்கியமாக, இந்தப் பயணத்தின் மூலம் நாங்கள் பெற்றிருக்கும் நிபுணத்துவம், இயக்க முறைமை மற்றும் தொழில்நுட்பத் தளங்கள், ஆப்பிரிக்காவிலும் இந்த வெற்றிகரமான மாதிரியை செயல்படுத்த எங்களை ஆயத்தப்படுத்தியுள்ளன. அங்கு டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்த நம்பகமான மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகள் மிக முக்கியமானவை. இதற்குமுன் இருந்திராத வகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை சிறப்பாக பயன்படுத்தவும், நிர்வகிக்கவும் முடியும் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். இதுபோன்ற நிலையான தொலைத்தொடர்பு அமைப்புகளை உருவாக்க உதவவும், இத்துறைக்கு புதிய மைல்கற்களை நிர்ணயிக்கவும் எங்களால் முடியும் என்ற தனித்துவமான போட்டி ஆதாயத்தை சாதகமான அனுபவ திறனையும் நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் செயல்பாட்டுத் திறனையும் இணைத்து எதிர்காலத்திற்குத் தேவையான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இண்டஸ் டவர்ஸின் தலைமைத்துவ பண்பை இச்சாதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. மேம்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகள், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தரவு சார்ந்த பராமரிப்புத் திறன்களைத் தனது வலையமைப்பு முழுவதும் ஒருங்கிணைப்பதன் மூலம், டீசல் எரிபொருள் சார்புநிலையைக் குறைத்து, எரிசக்தி பாதுகாப்பை அதிகரித்து, பசுமையான டிஜிட்டல் இணைப்பை நோக்கிய மாற்றத்தை இண்டஸ் டவர்ஸ் – ன் இச்செயல்திட்டம் விரைவுபடுத்துகிறது.
