hello madras mobile banner 1200x300

அறிவியல் முன்னேற்றத்தை மண்டல அளவிலான ஒத்துழைப்பாக மாற்றுவது குறித்த இந்தோ-பசிபிக் மண்டல மாநாடு

சென்னை – 4 நவம்பர், 2026 அறிவியல் முன்னேற்றத்தை மண்டல அளவிலான ஒத்துழைப்பாக மாற்றுவது குறித்த இந்தோ-பசிபிக் மண்டல மாநாடு புதுதில்லியில் தொடங்கியது.

இந்தியக் கடற்படையின் வருடாந்திர உயர்நிலை சர்வதேச உத்திசார் நடவடிக்கைகள் குறித்த இந்தோ-பசிபிக் மண்டல மாநாடு, 2026 நவம்பர் 3 அன்று புது தில்லியில் தொடங்கியது. கடற்படையின் அறிவுசார் அமைப்பான தேசிய கடல்சார் அறக்கட்டளை'யுடன் இணைந்து நடத்தப்படும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தோ-பசிபிக் பகுதியில், அறிவியல், தொழில்நுட்பம், கல்விசார் ஒத்துழைப்பு' குறித்து ஆய்வு செய்கிறது.

இதில், அறிவியல் முன்னேற்றங்கள், நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புக்களை, நடைமுறைக்கு உகந்த மண்டல அளவிலான ஒத்துழைப்பாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில், இந்தோ-பசிபிக் பகுதியில், அறிவியல் அறிவு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை, நீடித்த நிறுவன ஒத்துழைப்பாகவும், வலுவான கடல்சார் திறன்களாகவும், பகிரப்பட்ட மண்டல அளவிலான மீள்திறனாகவும் மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Read the full e-paper

Translate »