hello madras mobile banner 1200x300

பசும்பொன்னில் பாதுகாப்பு பணிக்குச் சென்ற காவலர் ஜனார்த்தனன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் ரூ.40 லட்சம் நிவாரண நிதி

சென்னை – 4 நவம்பர், 2026 சென்னை: பசும்பொன்னில் பாதுகாப்பு பணிக்குச் சென்ற காவல்துறை ஆயுதப் படையின் மோட்டார் வாகனப் பிரிவைச் சேர்ந்த காவலர் ஜனார்த்தனன் பணி முடித்து வீடு திரும்பும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார். இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் மு.ஜனார்த்தனன் (வயது 29), த/பெ.முருகப்பா, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணிக்கு ஓட்டுநர் பணியில் காவல் ஆய்வாளரின் பொலிரோ வாகனத்தை ஓட்டிச்சென்று, பணி முடித்து, 31.10.2026 அன்று அதிகாலை நாகப்பட்டினத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது,நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருகண்ணங்குடி ஆர்ச் அருகே, அவர் ஓட்டி வந்த வாகனத்தின்மீது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இரண்டாம் நிலைக் காவலர் மு.ஜனார்த்தனன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மு.ஜனார்த்தனன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

Read the full e-paper

Translate »