hello madras mobile banner 1200x300

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

சென்னை – 2 நவம்பர், 2026 தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (01.11.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கடின உழைப்பும், தொழில்முனைத் திறனும் கொண்ட மக்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். உற்பத்தி, வாகனங்கள், ஜவுளி போன்ற துறைகள் முதல் மின்னணுவியல், விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரம், வளர்ந்து வரும் தொழில்கள் வரை, புதுமை, சிறந்த திறன், தொழில் மேன்மை ஆகியவற்றின் மூலம் இந்த மாநிலம் தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மக்கள் தங்களது கலாச்சார அடையாளத்திலும் மரபுகளிலும் மிகுந்த பெருமிதம் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கலாச்சாரம் நமது தேசத்தின் நாகரிகப் பயணத்தை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

தொழில்முனைவோடு, கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

Read the full e-paper

Translate »