சென்னை – 2 நவம்பர், 2026 மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனத்தின் 55-வது தலைமை இயக்குநராக திரு தினேஷ் விட்டல்ராவ் கன்விர் பொறுப்பேற்றுள்ளார். புவியியல் ஆய்வுகள், கனிம ஆய்வு, ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள திரு தினேஷ் வி. கன்விர், தனது விரிவான அறிவியல், தொழில்நுட்ப, நிர்வாக அனுபவத்துடன் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
திரு தினேஷ் வி. கன்விர், நாக்பூரில் உள்ள ஆர்.டி.எம்.என்.யு பல்கலைக்கழகத்தில் புவியியலில் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்ததைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையில் இணைந்தார். 32 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில், அவர் இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையின் மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம் முழுவதும் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப, நிர்வாகப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். தலைமை இயக்குநர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, அவர் நாக்பூரில் உள்ள மத்திய மண்டலத்தின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்,
