hello madras mobile banner 1200x300

சென்ட்ரல் கிரானிக்கிள் நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு, பயிற்சி தொடர்பான செய்தி குறித்து, சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் விளக்கம்

சென்னை – 2 நவம்பர், 2026 போபாலில் இருந்து வெளிவரும் தி சென்ட்ரல் கிரானிக்கிள் நாளிதழில் அக்டோபர் 31, 2026 அன்று வெளியான ஒரு செய்தியில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் உண்மை நிலையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு, பயிற்சி கவுன்சில், வேலைவாய்ப்புத் தரவுகளைச் சரிபார்க்காமல், வேலைவாய்ப்புகளின் அடிப்படையில் கோடிக்கணக்கான பணத்தை வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.

உண்மை நிலவர அறிக்கை, துல்லியமாகவும் உண்மைச் சூழலுடனும் வெளியிடப்படுகிறது.

பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம், “பட்டியல் வகுப்பினருக்கான சிறப்பு மத்திய உதவி துணைத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ. 3,241.37 லட்சம் தொகையை அனுமதித்தது. இந்தத் தொகைக்கு எதிராக, 2021–22-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச வேலைவாய்ப்பு, பயிற்சி நிறுவனத்திற்கு மொத்தம் ரூ. 2,945.37 லட்சம் வழங்கப்பட்டது. இந்தத் தொகையில் ரூ. 1,296.00 லட்சம் (26 நவம்பர் 2021 தேதியிட்ட ஆணை எண் 4695-ன் படி), ரூ. 1,649.37 லட்சம் (25 மார்ச் 2022 தேதியிட்ட ஆணை எண் 10283-ன் படி) ஆகியவை அடங்கும்.

Read the full e-paper

Translate »