hello madras mobile banner 1200x300

கோல் இந்தியா நிறுவனம், 51-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது

சென்னை – 2 நவம்பர், 2026 நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், நாட்டின் முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்), இன்று (2026 நவம்பர் 1) தனது 51வது நிறுவன தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடியது.

இந்நிறுவனம், இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர நிலக்கரி உற்பத்தி, மொத்த நிலக்கரி விநியோகத்தை 2026 அக்டோபர் மாதத்தில் பதிவு செய்ததுடன், மின்சாரத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விநியோகத்தையும் செய்துள்ளது.

2026 அக்டோபர் மாதத்தில், மிக உயர்ந்த மொத்த நிலக்கரி விநியோகமான 70.3 மில்லியன் டன்களை இந்நிறுவனம் எட்டியுள்ளது.

மின்சாரத் துறைக்கான நிலக்கரி விநியோகமும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சிஐஎல் நிறுவனம், மின்சாரத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விநியோகமாக 57.1 மில்லியன் டன் நிலக்கரியை 2026 அக்டோபரில் வழங்கியுள்ளது.

கோல் இந்தியா தனது 51 ஆண்டுகளைக் கொண்டாடி, தேசத்திற்கான தனது 52-வது ஆண்டு சேவையில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்த மகத்தான சாதனைகள் சிறப்பு முக்கியத்துவம் பெறுகின்றன.

கோல் இந்தியா நிறுவனம் தனது 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புக்கும் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

Read the full e-paper

Translate »