hello madras mobile banner 1200x300

7 விமான நிலையங்களில் சர்வதேச பயணங்களுக்கான டிஜி யாத்ரா சோதனை நடைமுறை தொடக்கம்

சென்னை – 2 நவம்பர், 2026 இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மேலும் ஒரு படியாக, டிஜி யாத்ரா இந்தியா முழுவதும் உள்ள 7 விமான நிலையங்களில் சர்வதேசப் பயணிகளுக்கான சோதனை நடைமுறைகளைத் தொடங்கியுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 2026 வரை நடைபெறவுள்ள இந்தச் சோதனைகள், இ-பாஸ்போர்ட் வைத்திருக்கும் தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள், ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களால் இயக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமானங்களில் பயணிக்கும்போது, விமான நிலையங்களில் உள்ள குறிப்பிட்ட முனையங்களில் டிஜி யாத்ராவைப் பயன்படுத்த அனுமதிக்கும்.

டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை, சென்னை, அமிர்தசரஸ் விமான நிலையங்களில் இந்தச் சோதனை நடைமுறைகள் நடத்தப்படுகின்றன. தகுதியுள்ள பயணிகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள முனைய நுழைவாயில்கள், பாதுகாப்பு சோதனைப் பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சோதனைக் காலத்தில் பெறப்படும் கருத்துகள், 2027-ல் இதை விரிவாகச் செயல்படுத்துவதற்கான திட்டமிடலுக்கு வழிகாட்டும்.

இந்த வசதியானது, தற்போதுள்ள பயண நடைமுறைகளுக்கு மாற்றாக அல்லாமல், அவற்றிற்குத் துணையாகவே அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தொடர்ந்து தங்கள் பயண ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும். விமான நிறுவனத்தின் கட்டாய ஆவணச் சரிபார்ப்புகள், குடிவரவு நடைமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

Read the full e-paper

Translate »