hello madras mobile banner 1200x300

பெங்களூரு – மும்பை இடையேயான படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், போக்குவரத்து இணைப்பிற்குப் பெரும் ஊக்கமளிக்கும் – பிரதமர் திரு நரேந்திர மோடி

பெங்களூரு – 2 நவம்பர், 2026 பெங்களூரு – மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் சேவை, ரயில் போக்குவரத்து இணைப்பிற்கு ஒரு பெரிய ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில், பெங்களூரு – மும்பை இடையேயான இணைப்பிற்கு மற்றொரு குறிப்பிடத்தக்க உந்துதலை அளிப்பதாகவும், பயணத்தை மேலும் வசதியாக்கி, மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதாகவும் உள்ளதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தச் சேவை கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் ஆகியோருக்குப் பயனளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மேம்பட்ட ரயில் இணைப்பை நோக்கிய மற்றுமொரு படி. அதுவும் தொழில்நுட்பம், புதுமைகளின் நகரமான பெங்களூருவிலிருந்து!

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில், பெங்களூரு – மும்பை இடையேயான இணைப்பில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

இந்த ரயில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும். குறிப்பாக இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும்."

Read the full e-paper

Translate »