hello madras mobile banner 1200x300

“அதிக பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்தாரா விஜய்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை – 1 நவம்பர், 2026 சினிமாவை விட அதிக பணம் சம்பாதிக்க விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மறைமலை நகரில் அதிமுகவின் 55ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; த.வெ.க என்ற செடி முளைத்து 3 இலை தான் விட்டிருக்கு அதற்குள் ஆட்சிக்கு வந்துட்டு என்ன ஆட்டம் போடுறாங்க.. பொன் விழா கண்ட அ.தி.மு.கவை பார்த்து தீர்ந்து போன கட்சி என்கிறார். சில கட்சிகள் ரீல்ஸ் விடுகின்றன; ரியலாக இருக்கும் கட்சி அதிமுகதான்.

புவியியல் காண்

உயிரோட்டமுள்ள அதிமுகவை பலர் உடைக்கவும் முடக்கவும் பார்க்கின்றனர். அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது. தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது? தவெகவின் 6 மாத ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பரிசு அரிசி விலை உயர்வுதான். ஒருபுறம் விலைவாசி உயர்வு, மறுபுறம் வேலையில்லா திண்டாட்டம்தான் தமிழ்நாட்டில் உள்ளது. சினிமாவை விட அதிக பணம் சம்பாதிக்க விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? ரூ.14,000 கோடி சம்பாதித்த முதல்வர் விஜய் அதற்கு வரி செலுத்தினாரா?

கொடுத்து சிவந்த கரமான எம்ஜிஆர் தனது சொத்துகளை பிறருக்கு எழுதி வைத்ததுபோல் விஜய் எழுதி வைப்பாரா? தவெக ஆட்சியிலும் லஞ்சம் இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திலும் வேலை நடப்பதில்லை. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலைதான் உள்ளது. துணை ஜனாதிபதி, நான் சென்றபோது கூட மீனாட்சி அம்மன் கோயிலில் மின் வெட்டு ஏற்பட்டது. மேடையில் பேசும்போதே மின்வெட்டு ஏற்பட்டு விடுமோ என நினைக்கும் சூழல் உள்ளது. நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு கரூர் சென்று முதல்வர் விஜய் ஆறுதல் சொன்னாரா?

நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு கரூர் சென்று முதல்வர் விஜய் ஆறுதல் சொன்னாரா? கரூர் சம்பவம் நடந்த பிறகு தவெக தலைமை அலுவலகம் 15 நாட்கள் மூடப்பட்டது. வேடந்தாங்கல் பறவை போல அமைச்சர் நிர்மல்குமார் பல கட்சிகளுக்கு சென்று வந்தவர். விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் அல்ல, அவருக்கு மேல் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் என்று கூறினார்.

Read the full e-paper

Translate »