hello madras mobile banner 1200x300

6 உழவர் சந்தைகளில் நாளை முதல் இயற்கை விளை பொருட்கள் விற்பனை துவக்கம்

சென்னை – 1 நவம்பர், 2026 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில்வாரந்தோறும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இதன்படி, அம்பத்தூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய உழவர் சந்தைகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாரவாரிக்குப்பம் உழவர் சந்தையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பருத்திப்பட்டு, ேபரம்பாக்கம் ஆகிய உழவர் சந்தைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை நடைபெறும். திருவள்ளூரில் உள்ள உழவர்சந்தையில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி இரவு 7 மணி வரை இயற்கை வேளாண் சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள், இயற்கை மற்றும் அங்கக வேளாண் விளைபொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல், இயற்கை விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவுதல் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவையாகும். இதன்மூலம் இயற்கை விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதுடன், நுகர்வோர் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்களை நேரடியாக பெற்றுப் பயன்பெறவும் வாய்ப்பு ஏற்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான நேரடி சந்தைத் தொடர்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும்.

Read the full e-paper

Translate »