hello madras mobile banner 1200x300

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை – 1 நவம்பர், 2026 நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் 31.07.2026 வரை நீட்தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் நீட்தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு இவ்வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்து, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Read the full e-paper

Translate »