hello madras mobile banner 1200x300

ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஆஜராக படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பை ஓடிய நடிகை நோரா: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை – 1 நவம்பர், 2026 ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் அதிரடியாக சம்மன் அனுப்பியதால், நடிகை நோரா பதேகி படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பைக்கு விரைந்தார். திகார் சிறையில் இருந்தபடி தொழிலதிபர்களின் குடும்பத்தினரை மிரட்டி ரூ.200 கோடி பறித்த கொடூர மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதில் இடைத்தரகர் பிங்கி இரானி மூலமாக சுகேஷ் சந்திரசேகர் அளித்த சொகுசு பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பரிசுகளைப் பெற்றதாக பாலிவுட் நடிகை நோரா பதேகி மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் 3வது துணை குற்றப்பத்திரிகையில் அரசுத் தரப்பு 3வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நோரா பதேகி, வரும் நவம்பர் 2ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூடுதல் அமர்வு நீதிபதி ககன்தீப் சிங் சம்மன் பிறப்பித்துள்ளார். இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘தி ராயல்ஸ்’ என்ற புதிய இணையத் தொடரின் படப்பிடிப்பில் இருந்த அவர், பணியை உடனடியாக ரத்து செய்துவிட்டு நள்ளிரவில் விமானம் மூலம் அவசரமாக மும்பை சென்றடைந்தார்.

அங்கு தனது வழக்கறிஞர்களுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் நோரா பதேகி, ‘சென்னையில் நடந்த இந்த தொடர் விசாரணை தன்னை மன உளைச்சலுக்கும் நற்பெயருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read the full e-paper

Translate »