சென்னை – 1 நவம்பர், 2026 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் 59 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நேற்று நடந்த பைனலில் பான் அமெரிக்க சாம்பியன் அபிகெய்ல் நெட்டேவுடன் மோதிய மனிஷா (29 வயது) தொடக்கத்தில் 0-6 என பின்தங்கினாலும், பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 8-6 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். உலக மல்யுத்த சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை மனிஷாவுக்கு கிடைத்துள்ளது.
