சென்னை 24, அக்டோபர் 2026: சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத் துறைச் செய்திகளை வெளியிடும் தி எகனாமிக் டைம்ஸ் நிறுவனத்தின் யூள மான ET Brand Equity.com , ‘பிராண்ட் வேர்ல்ட் உச்சி மாநாடு தெற்கு 2026’ நிகழ்வின் இரண்டாம் பதிப்பை நவம்பர் 26, 2026 அன்று சென்னையில் உள்ள தாஜ் வெலிங் டன் மியூஸில் நடத்து கிறது. இந்நிகழ்வுக்கு சாம்சங் விளம்பரப் பிரிவு ஆதரவு வழங்கு கிறது.
முதல் பதிப்பில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு நடை பெறும் மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட அமர்வுகளும், 50-க்கும் மேற்பட்ட பேச்சாளர் களும் இடம்பெறுகின் றனர். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த த¬ லமைச் சந்தைப் படுத்தல் அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், தொழில்முனைவோர், விளம்பர நிறுவனங் களின் தலைவர்கள் மற்றும் ஊடகத் துறை வல்லுநர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
ª ச ய ற் ¬ க நுண்ணறிவு மூலம் வளர்ச்சி, சில்லறை விற்பனை ஊடகங்கள், இணைக்கப்பட்ட தொலைக்காட்சி, பிராந்திய மொழிக் கதைசொல்லல், உயர் தரப் பொருட்களுக் கான நுகர்வோர் விருப்பம், வாடிக்கை யாளர் அனுபவம் மற்றும் உற்பத்தித் துறை யின் மூலம் உருவாகும் புதிய வணிகச் சிந்தனைகள் ஆகியவை மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்களாக இருக்கும்.
கருத்துரைகள், நேரடிக் கலந்துரை யாடல்கள் மற்றும் குழு விவாதங்கள் வாயிலாக, பிராந்தியப் பண்பாட் டுடன் பொருந்தும் வகையில் வலுவான வணிகக் குறியீடுகளை உருவாக்குவதுடன், அவற்றை நாடு முழுவதும் விரிவுபடுத்து வதற்கான உத்திகளும் ஆராயப்படும்.
இடிபி2பி பிரிவின் வணிகத் தலைவர் அமித் குப்தா கூறுகையில், “தென்னிந்தியா எப் போதும் தனித்துவமான முறையில் வணிகக் குறியீடுகளை உருவாக்கி வந்துள்ளது. நுகர்வோ ரின் ஆழமான நம்பிக் கை, வலுவான பிராந் திய அடையாளம், மக்களின் தேவைகள் குறித்த தெளிவான புரிதல் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இந்த அனுபவங்களைப் பகிர்ந்து, புதிய சிந்த னைகளை விவாதித்து, வளர்ச்சிக்கான வாய்ப் புகளை விரிவுபடுத்தும் தளமாக இந்த மாநாடு அமையும்” என்றார்.
நிகழ்வில் தொழில் துறை வல்லுநர்களுட னான சந்திப்புகள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு வாய்ப்புகளும் வழங்கப்படும்.
பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. சந்தைப்படுத்தல் துறை வல்லுநர்கள், தொழில் முனைவோர் மற்றும் நிறுவனத் தலைவர்கள் அழைப்பைப் பெறவும், கூட்டாண்மை வாய்ப்பு களை அறிந்துகொள்ள வும் கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்வையிடலாம்: https://brandequity.eco nomictimes.indiatimes .com/brand-world-summit-south
