hello madras mobile banner 1200x300

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் சட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது: ஒன்றிய அமைச்சர் தகவல்

சென்னை 17, அக்டோபர் 2026: இந்தியா – அமெரிக்கா இடையிலான இரு தரப்பு வர்த்தக ஒப்பந் தத்தின் முதல்கட்டப் பணிகள் நிறை வடை ந்து, தற்போது சட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

போட்டி நாடு களைக் காட்டிலும் இந்தியாவுக்குச் சாதக மான வணிகச் சலுகை கள் கிடைக்கும்போது இந்த ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இது குறித்துப் பேசிய வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், ஒப்பந்தப் பேச்சுவார்த் தை சரியான பாதையில் சென்று ªணூ£ண்டிருப் பதாகவும், அமெரிக் காவின் ஒட்டுமொத்த வரிக் கட்டமைப்பு முடிவுக்கு வந்ததும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து இந்தியா வில் உள்ள அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் பேசுகையில், ‘‘இந்தி யாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த் தை மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது . ஐரோப்பிய யூனிய னுடன் ஒப்பந்தம் நிறை வேற 20 ஆண்டு கள் ஆன நிலையில், குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது பெரு மைக்குரியது’’ என்று தெரிவித்தார்.

மேலும் பாது காப்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடு களும் இணைந்து செயல்பட்டு வருவது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »