சென்னை, 17 அக்டோபர் 2026: கோவை காந்திபுரத் தில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகக் கட்ட டத்தை முதலமைச்சர் விஜய் நேற்று (வெள்ளிக் கிழமை) திறந்து வைத்தார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தி லிருந்து அவினாசி ரோடு வழியாக காந்தி புரத்துக்கு 1 கிலோ மீட்டர் தூரம் ‘ரோடு ஷேலா சென்ற முதல மைச்சருக்கு சாலையில் திரண்டிருந்த பொது மக்களும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ. க.) தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெரியார் அறிவுல கம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப் பளவில் 7 தளங்களுடன் பிரமாண் டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவமாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.
பெரியார் நூலகத் தை திறந்து வைப்பதற் காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு காலை 11 மணியளவில் கோவை விமான நிலையம் வ ந்தார். அங்கு அவருக்கு அமைச்சர் கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவிநாசி சாலை, காமராஜர் சாலை சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, எல்.ஐ.சி சந்திப்பு வழி யாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 11 கிலோ மீட்டர் தூரம் ‘திறந்த வேனில்’ நின்ற படி மக்களை சந்தித் தார்.
பதாகை ஏந்தி உதவி கோரிய சிறுமிகளுக்கு…
முதலமைச்சர் விஜய் ‘ரோடு ஷோ’ சென்று கொண்டிருந்தபோது ஆருத்ரா என்ற சிறுமிக்கு உதவிகோரி அவரது பெற்றோர் பதாகை ஏந்தி நின்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்த முதலமைச்சர் உடனே வாகனத்தை நிறுத் தினார். ஆருத்ராவின் பெற்றோரிடமிருந்து பதாகையைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய், பதாகையின் பின்னே அவர்களின் மொபைல் எண்ணை யும் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உதவுவ தாக சைகையில் உறுதி யளித்தார்.
அறிவுலகக் கட்ட டத்தின் சிறப்புகள்
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் சுமார் 7 ஏக்கர் பரப்பில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பொதுப் பணித் துறை சார்பில் பெரியார் அறிவுலகக் கட்டடம் கட்டப்பட் டுள்ளது. இதற்கு 2024 நவம்பர் 6ந் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உரு வாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்பட் டுள்ளது. இந்த வளாகத் தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக் கான தனித்துவ நூலகம், 350 பேர் அமரக்கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், விண் வெளி குறித்த நேரடி அனுபவத்தை பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் நூலகம் மற்றும் அறிவியல் சார்ந்த வசதிகள் தகுந்த முறையில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், எண்ம (டிஜிட்டல்) நூலகம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்று நூல்கள் பிரிவுகள், ஆராய்ச்சி படிப்பகங்கள், குழந்தை கள் நூலகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவ னங்களுக்கான ‘இன்கு பேஷன்’ மையம் ஆகிய வையும் ஏற்படுத்தப்பட் டுள்ளன.
முதல் தளத்தில்-வரவேற்பறை, அறிவியல் மையம். 2ம் தளத்தில்- சொந்த நூல் படிப்பிடம், சிறுவர் நூலகம், 3வது தளத்தில் – போட்டித் தேர்வு பயிற்சி மையம், நூல கம், நிர்வாகப் பிரிவு, 4வது தளத்தில் – வர லாற்று நூல்கள், தமிழ் நூல்கள், பருவ இதழ் கள், 5வது தளத்தில் – ஆங்கில நூல்கள், இன்கு «Ðஷன் சென்டர், 6வது தளத்தில் – ஆங்கில நூல்கள், இன்குபேஷன் சென்டர், 7வது – அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் அமைந்துள்ளது.
