hello madras mobile banner 1200x300

9-வது இயற்கை மருத்துவ தினம் நவம்பர் 18 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது

சென்னை – 18 நவம்பர், 2026 9-வது இயற்கை மருத்துவ தினம் 2026 நவம்பர் 18 அன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் கர்நாடகாவின் நாகமங்கலாவில் உள்ள மத்திய யோகா & இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘இயற்கை மருத்துவம், ஆரோக்கியமான இந்தியா’ என்ற கருப்பொருளில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. உடல் பருமன், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைத் தடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், நோய்த் தடுப்பு, சுகாதாரப் பராமரிப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் இயற்கை மருத்துவத்தின் பங்கை இந்த நிகழ்வு எடுத்துரைக்கும்.

பிரதமரின் ஆரோக்கியமான இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, முறையான உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, யோகா, மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த ஆண்டுக் கருப்பொருள் வலியுறுத்துகிறது. நாடு தழுவிய விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, குடும்பங்கள், பெண்கள், மாணவர்கள், பணியாளர்கள், ஆயுதப் படை வீரர்கள், மூத்த குடிமக்கள், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கிய 10 துணைக் கருப்பொருள்களின் கீழ் சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. யோகா, இயற்கை மருத்துவத்திற்கான ஆராய்ச்சி, கல்வி, சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகளையும் இந்த தினம் எடுத்துக்காட்டுகிறது.

Translate »