hello madras mobile banner 1200x300

வீரசோழனில் வ.உ.சிதம்பரனாரின் 150வது -பிறந்தநாள் விழா

விருதுநகர்  – வ.உ சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாக கடைபிடிக்கப்படும் எனவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது உட்பட 14 முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீீரசோழன் கிராமத்தில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வ.உ.சி பேரவையின் தலைவர் குமரேசன் தலைமையில் மந்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வஉசி பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »