hello madras mobile banner 1200x300

விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்….

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் செய்தனர். விக்கிரவாண்டி இந்தியன் வங்கி எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு தி.மு.க., நகர செயலாளர் நைனாமுகமது தலைமை தாங்கி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார் . நகர தலைவர் தண்டபாணி மத்திய அரசின் கேஸ், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் விவசாய வேளாண் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.


தி.மு.க.,மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு ஜீவானந்தம்,பாலாஜி, முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், முன்னாள் துணை சேர்மன் சர்க்கார் பாபு, காங்., நகர தலைவர் குமார், வி.சி.க., நகர அமைப்பாளர் சந்தர், மா.கம்யூ., மாவட்டகுழு கிருஷ்ணமூர்த்தி, இ.கம்யூ., நகர செயலாளர்பால்ராஜ் ,த.மு.மு., சாதிக் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »