hello madras mobile banner 1200x300

வருஷநாடு ஊராட்சியில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது….

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் 17 கூட்டு தெருவில் பவள நகர் செல்லும் சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது இச்சாலையில் மெட்டல் மட்டும் அமைக்கப்பட்டு தார்சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இச்சாலையில் ஒரு சில இடங்களில் பள்ளமாக காணப்படுவதால் நீர்தேங்கும் நிலையில் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் இதற்கிடையில் பன்றிகள் ஆதிக்கம் அதிகப்படியாக உள்ளது. மேலும் கொசு உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகமாவதால் டெங்கு, மலேரியா, அம்மை போன்ற நோய்கள் எளிதில் பரவும் சூழல் உள்ளது. எனவே வருஷநாடு ஊராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்து பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைத்து வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »