hello madras mobile banner 1200x300

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படம்!

சென்னை 25, அக்டோபர் 2026: ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்கா ரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கி யுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத் துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்ல ரும் வெளியிடப்பட் டுள்ளது. வரும் அக்டோபர் 30-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ந ரி க் கு ற வ ர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக் கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மைய மாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகி யுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர் வதை மையமாகக் கொண்டுள்ள இப் படம், சமூக விழிப் புணர்வுடன் நகைச் சு¬ வ மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது.

விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்க அனுபவங் களையும், அதன் பின்னணியையும் பகிர்ந்துகொண்டனர்.

இயக்குநர் கே.வி. கதிர்வேலு பேசுகையில், நரிக்குறவர் சமூகத்தின ரின் வரலாறு மற்றும் பின்னணியை அறிந்து கொள்வதற்காக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இப் படத்தை உருவாக்கி யுள்ளதாகத் தெரிவித் தார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அதிகாரம் கொண்டவர் களுக்கு அளிக்கப்படும் மரியாதை, மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற பிரச்சினை களையும் இப்படம் பேசுவதாகக் குறிப் பிட்டார். நரிக்குறவர் சமூகத்தின் வரலாற் றுடன் அரசியல் சார்ந்த அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாகவும், சமூகக் கருத்துகளுடன் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக் கூடிய படமாக ‘சிங்கா ரம்’ உருவாகியுள்ள தாகவும் கூறி, அனை வரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், இப்படத் தில் நடிக்க வாய்ப் பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, ரமண பாலாஜி உள்ளிட் டோருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவு கூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கை யும் முக்கியமானவை என்று தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப் படத்தைத் திரை யரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

‘சிங்காரம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலை யில், சமூகப் பின்னணி யையும் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வு களையும் இணைத் துள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர் பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

நடிகர்கள்:

யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

தயாரிப்பு நிறுவனம் – ராக் புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர்கள் – ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி, எழுத்து மற்றும் இயக்கம் – கே.வி. கதிர்வேலு, இசை – சாம் சி.எஸ்., பாடல்கள் – விவேகா, ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ். குமார், படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – குருராஜ், சண்டைப் பயிற்சி – ஃபேன்டம் பிரதீப், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »