hello madras mobile banner 1200x300

மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி மக்களவைத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

சென்னை – 12 நவம்பர், 2026 மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரும் மெளலானா அபுல் கலாம் ஆசாதின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங், மாநிலங்களவை செயலாளர் பி சி மோடி ஆகியோரும் மௌலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மக்களவைச் செயலகம் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரித்திருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது.

Read the full e-paper

Translate »