தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு சட்டமன்றத்தைத் திரைப்பட அரங்கமாக மாற்றிய பெருமை வரலாறு இந்த தவெக அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இதை வருத்தத்தோடு ஜனநாயக நாட்டில் பதிவு செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிற பொழுது அந்த மானிய கோரிக்கையில் பேசுகிற சட்டமன்ற உறுப்பினருடைய கருத்துக்களை உள்வாங்கி கொண்டு அதற்கான பதிலை அமைச்சர்கள் கொடுப்பதும், புதிய அறிவிப்புகளை வெளியிடுவதும் தான் இதுவரை இருந்த சட்டமன்ற மரபு. ஏற்கனவே இருந்த தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்கள் எல்லாம் காவல்துறை உள்துறை உட்பட அவர்கள் வகிக்கிற துறைகளில் வரக்கூடிய அந்த டிமாண்ட், மானிய கோரிக்கை மீது எதிரே இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதை எல்லாம் குறிப்பெடுத்து கொண்டு இறுதியாக பதிலளிப்பார்கள். நேற்றைக்கு நீங்கள் எல்லாம் ஒரு திரைப்பட காட்சியை பார்த்திருப்பீர்கள். திரையில் நடித்தவர் நாட்டை ஆள வந்தால் என்ன நிலைமை என்பதை பெருந்தலைவர் காமராசருடைய பாணிலே சொல்ல வேண்டும் என்று சொன்னால் கூத்தாடியிடம் நாட்டை கொடுத்தால் கூத்தியாரிடத்தில் கொடுத்து வருவார் என்பதுதான் இன்றைக்கு என்னிடத்தில் எங்களை போன்றவர்களுக்கு நினைவுக்கு வருகிறது.
காவல்துறை மானியத்தில் எதிர்கட்சி தலைவர் உட்பட 13 பேர் உரையாற்றினார்கள். ஒரு முதலமைச்சராக இருக்கிறவர் காவல்துறை மானியத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறவர் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள்? இந்த அரசின் மீது என்ன குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்கள்? அதற்கு எந்த வகையில் பதில் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவ்வளவு காலம் முதலமைச்சர்கள் பார்த்த வேலை. ஆனால் எப்படி எதிர்கட்சியை ட்ரிக்கர் பண்ணலாம் எப்படி கண்டென்ட் ரீல்ஸுக்கு கொடுக்கலாம், எவ்ளோ ரீல்ஸ நம்ம டெலிவரி பண்ணலாம் இதை மட்டுமே மையமாக வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய 15 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தொடை நடுங்கி முதலமைச்சர் ஓடிவிட்டார் சட்டமன்றத்தை விட்டு. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் 15 கேள்விகளை உங்களை நோக்கி கேட்டிருக்கிறார். நீங்கள் பதில் சொல்வதற்கு முந்தைய தினம் உங்களுடைய கட்சிக்காரரை ஓட ஓட சென்னை மாநகரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றி கூட தன்னிலை விளக்கம் சொல்ல முடியாத தொடைநடங்கி முதலமைச்சர் திரு விஜய் அவர்கள். எதிர்கட்சிகள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாத தொடநடுங்கி முதலமைச்சர் விஜய் அவர்கள். முதல் வரிசையில் இருக்கக்கூடிய எதிர்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆகட்டும் அல்லது தோழமை கட்சியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கட்டும், முக்கியமான கட்சியை சேர்ந்தவர்கள் முக்கியமாக முதல் வரிசையில் இருக்கக்கூடியவர்கள். இப்படி யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல் நீங்களா பிரிப்பேர் பண்ணி கொண்டு வந்திருக்கக்கூடிய அந்த டயலாக்க நீங்க உச்சபட்ச ஆக்ரோஷத்தில சினிமாவில கிளைமாக்ஸ்ல பேசுற மாதிரி நீங்க ஒரு நடிப்பு நடிச்சிட்டு போயிருக்கீங்க. இதனால யாருக்கு என்ன லாபம்? ஆட்சிக்கு புதிதாக நாங்க வந்திருக்கிறோம். மாற்றத்தை தருகிறோம்னு சொல்லி நீங்க என்ன மாற்றத்தை நீங்க கொடுத்திருக்கீங்கன்னா திரைப்படத்தில் நடிச்சதுதான் இன்னைக்கு வந்து சட்டமன்றத்தில் நடிச்சிருக்கீங்க. மாண்புமிகு முதலமைச்சர் ரொம்ப பெரிய அறிவுஜீவி மாதிரி பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை எங்க மீது சொல்றார். ஒரு Ed போடப்பட்ட எஃப்.ஐ.ஆர் யை எடுத்துக்காட்டிட்டு போதுமா போதுமா போதுமா.. என்ன போதுமா.? FIR தான் எல்லாம் பப்ளிக் டொமைன்ல இருக்குதே என்ன நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை எடுத்துக்காட்டி போதுமா போதுமான்றதுக்கு அப்படின்னா தீர்ப்பு வந்துருக்கா அதுல. வேற பெருசா டயலாக் சொல்றாரு சும்மாவே நான் காட்டு காட்டுன்னு காட்டுவேன் அப்படின்றாரு அப்ப எதை காட்ட போற.? இது சட்டமன்றமா.? இல்ல என்ன திரையரங்கமா.? அப்ப நீங்க மட்டும் டபுள் மீனிங்ல ட்ரிபிள் மீனிங்ல எல்லாம் பேசலையா எதை காட்ட போற உன்கிட்ட ஆதாரம் இருந்தா அதை எடுத்து காட்டு ஊழல் குற்றச்சாட்டுல தண்டிக்கப்பட்டிருந்தா வெர்டிக்ட் அதை எடுத்து காட்டு. ஆனா நீ ரோல்ஸ்ராய் கார் இறக்குமதி செய்யும்போது அதுக்கு வரி கட்டாத போது நீதிமன்ற தீர்ப்பே கொடுத்திருக்க நீ வரி கட்டாதது ஒரு தேச துரோக குற்றத்துக்கு இணையானதுன்னு சொல்லிருக்கு நீதிமன்றம். அதை எடுத்து காட்டவா நாங்க. அதுமட்டுமில்லாம சினிமா துறையில் இருக்கக்கூடிய நீங்க எல்லாம் வந்து ரியலிஸ்ட்லதான் ஹீரோவா இருக்கீங்க ரியல்ல ஹீரோவாங்கன்னு சொன்னாங்களே அதை எடுத்து நாங்க காட்டணுமா.?
மிஷாவை பத்தி பேசுறதுக்கு என்ன தகுதி திரு.முதலமைச்சர் விஜய்க்கு இருக்கு. ஒரு உடல் மொழி வேற காட்டுறார். அந்த மிசாவில போய் கைது பண்றது என்னமோ பல வழக்குகளை போய் கைது பண்ணுவாங்க அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கு ஒரு அறிவு ஜீவி சட்டத்துறை அமைச்சர் திரு நிர்மல் குமார் பேசுறார். மிசானா என்ன தெரியுமா.? மெயின்டனன்ஸ் ஆப் இன்டர்னல் செக்யூரிட்டி ஆக்ட் உள்நாட்டினுடைய பாதுகாப்பை உறுதி செய்ய போடப்பட்ட ஒரு ஒரு சட்டம் அது. இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணும்போது மிசாவில் எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அதை எவ்வளவு கொச்சையா பேசுற.? ஏன்னா நீ வந்த வழி அந்த மாதிரி. உன் புத்தி அந்த மாதிரி டாய்லெட்ல எட்டிப் பார்க்கிறவன் தானே இந்த நிர்மல் குமார். அப்ப எப்படி இருக்கு உங்களுடைய புத்தி?
“பெண்கள் குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்கிறார்கள், dacoity-ல் ஈடுபட்டார்கள், robbery-ல் ஈடுபட்டார்கள்” என்று சொல்கிறீர்களே. MISA-வில் யாரைக் கைது பண்ண முடியும்?
Defence of India-விற்கு, இந்தியாவுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தக்கூடிய வகையில் இருந்தால் கைது செய்யப்படுவார்கள். உள்நாட்டினுடைய கலவரங்களை ஏற்படுத்துவது, law and order-ஐ சீர்குலைப்பது அல்லது law and order-க்கு குந்தகம் விளைவிப்பது போன்ற காரணங்களுக்காக கைது செய்வார்கள்.
Essential Commodities-ஐ பதுக்கி வைத்திருந்தால் கைது செய்வார்கள். Internal Disturbance-க்காக கைது செய்வார்கள். Public Disorder-க்காக கைது செய்வார்கள். இப்படிப்பட்ட கைதுகளுக்குத்தான் MISA இருக்கிறதே தவிர, நீங்கள் சொல்கிற மாதிரி, திரு. நிர்மல் குமார் சொல்கிற மாதிரி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குக்கோ, வழிப்பறிக் கொள்ளைக்கோ, dacoity-க்கோ அல்ல.
நீ உள்ளபடியே நீ சட்டம் படிச்சுதான் வந்தியா இல்ல திருட்டு சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருக்கியா.? நீ அபிடவிட்ல எல்எல்பின்னு போட்டுருக்கியே உன்னுடைய அது திருட்டு சர்டிபிகேட்டா.? மிசாவுக்கு அர்த்தம் தெரியாமலயே ஒரு சட்டமன்றத்துல ஒரு சட்டமைச்சர் இருக்கிறது கேவலம்.
நாம எல்லாம் வந்து ஒரு நல்ல சூழல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்திருப்போம். அப்பா அம்மா கூட நல்லா பேசி பழகி வளர்ந்திருப்போம். ஆனா நல்ல சூழல் இல்லாம ஒரு சைல்டுஹுட் டிராமால வளர்ந்தவர்தான் திரு நிர்மல் குமார். ஒரு பைத்தியத்தை தமிழ்நாட்டினுடைய சட்ட அமைச்சரா வச்சுக்கிட்டு தமிழ்நாடு படும் பாடு மிக மோசமா இருக்கு. தயவுசெய்து அடுத்த சட்டமன்ற கூட்ட தொடர்குள்ள இந்த பைத்தியத்தை பைத்தியகார ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்து அதுக்கப்புறம் நீங்க அமைச்சரா வந்து வேலை செய்ய விடுங்க.
அரசியலமைப்பு சட்டத்துல இன்சைன் பர்சனாலிட்டிஸ் எல்லாம் அமைச்சரா இருக்கக்கூடாது. நீங்க இன்சைன் பெர்சனாலிட்டியா இருங்க. சரி பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க? உங்க தலைவரே ஒரு சைக்கோ தான். ஏன்னா வந்து நேத்துக்கு ஒரு சைக்கோ எப்படி செயல்படுமோ அந்த மாதிரிதான் தமிழ்நாட்டு முதலமைச்சர் சட்டமன்றத்துல செயல்பட்டிருக்கிறார். நான் கேட்கிறேன் திரு. விஜய் அவர்களே எங்களுடைய தலைவரை பார்த்து நீங்க பேசுறீங்களே சர்காரியா கமிஷன பத்தி நீங்க பேசுறீங்க, மிசா கைதியாக இருந்து துன்புறுத்தப்பட்டவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அவர்கள் தாக்குதலுக்கு ஆளானதை விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இஸ்மாயில் அவர்களை கொண்ட ஒரு கமிஷன் அந்த கமிஷன் ரிப்போர்ட்தான். இந்த ரிப்போர்ட்ல மிகத் தெளிவா சொல்லி இருக்கது. யார் யாரெல்லாம் இதுல குற்றவாளிகளா இருக்காங்க கைது செய்யப்பட்டிருக்கறாங்க. இதில் ஆற்காடு வீராசாமி, திரு.மு.க.ஸ்டாலின், திரு.முரசொலி மாறன், திரு.என்விஎன் சோமு, திரு.என்விஎன் செல்வம் இது போன்ற எல்லோருமே வந்து கைது செய்யப்பட்டிருக்காங்கன்னு இதுல சொல்லப்பட்டிருக்கு இவ்வளவு பெரிய பக்கங்களை கொண்டத நான் கொடுக்கிறேன் உங்ககிட்ட இல்லன்னா நான் தபால்ல அனுப்பி விடுறேன். இந்த இது எதற்காக போடப்பட்டிருக்காங்க சென்னை மத்திய சிறையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான கால அளவில் அரசியல் கைதிகளை கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையும் அதன் மீது அரசின் ஆணையும் இதுதான். இதுல எங்க இருக்குது மற்ற கேஸ் எல்லாம். ஒரு தாய்மாமனுடைய உறவையே கொச்சைப்படுத்தி, ராகுல் காந்தியினுடைய சகோதரி பிரியங்கா காந்தியினுடைய குழந்தையை நீ அசிங்கமா போட்ட புத்தி உனக்கு எப்படி போகும். உங்க தலைவருடைய இனிஷயலே ஒருத்தர் கேள்வி கேட்டிருக்கிறார் பாஜக தலைவர். திரு.ஜோசப் விஜயனுடைய இனிஷயல கொஸ்டின் பண்ணி இருக்கிறார் அதை கைது பண்றதுக்கு உங்களுக்கு துப்பு இல்லை, அது மேல நடவடிக்கை எடுக்கறதுக்கு உங்களுக்கு தைரியம் இல்லை தொடநடங்கி முதலமைச்சர் திரு ஜோசப் விஜய். ஆனா நீங்க வந்து பெண்களுடைய பாதுகாப்புக்காகவும் பெண்களுடைய மாண்புக்காகவும் நீங்க ரொம்ப அக்கறை எடுத்துக்கறீங்களாம். உங்களுடைய தாயாரை தவறாக பேசி இருக்கிறார் ஒருவர் அதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க.?
இன்னைக்கு நீங்க சர்க்காரியா கமிஷன பத்தி பேசுறீங்களே சர்க்காரியா கமிஷன் நிரூபிக்கப்பட்டதா? சர்க்காரியா கமிஷன்ல போடப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் எம்ஜிஆரே வந்து எனக்கு அதுபற்றி ஒன்னும் தெரியாது. சேலம் கண்ணன் வக்கீல் கொடுத்தத தான் நான் கொண்டாந்து சொன்னேன். அதைதான் அப்படியே கையெழுத்து போட்டு கொடுத்தேன். எனக்கு அது ஒண்ணுமே தெரியாதுன்னு பின்னங்கால் பிடர ஓடுனவர் தான் எம்ஜிஆர். அந்த எம்ஜிஆர் சொன்ன குற்றச்சாட்டுகள்ல மந்திரியா இருந்தவங்கள தான் எம்ஜிஆர் தன்னுடைய கேபினெட்ல வச்சிருந்தாரு. அப்போ நீங்க எதை நோக்கி போறீங்க?
தமிழ்நாட்டினுடைய அரசியல மிக கேவலமாக கையாண்டு கொண்டிருக்கிற விஜயை பார்த்து நான் கேட்கக்கூடிய கேள்வி எல்லாம், நீங்க மிசாவை பத்தி பேசக்கூடிய தகுதி உங்களுக்கு இருக்கா? எங்களுடைய தலைவருடைய கையில இன்னைக்கு ஒரு தழும்பு இருக்கு. எத்தனையோ கைதுகள்ல வந்து அவரை கைது செய்றாங்க. அரசியல் வழக்கறிஞரா நான் கண்ட ஒரு பர்சனல் எவிடன்ஸ். இந்திய நாட்டினுடைய வரலாற்றுல ஒரு அரசியல் தலைவனுக்கு மச்சத்தை தாண்டி மிசா தழும்பை அடையாளம் காட்டுகிற ஒரே தலைவன் என்னுடைய தலைவன் மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய முன்னாள் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள். அவருடைய வரலாறு எங்க நீ எங்க.? நீங்க எல்லாம் வந்து பிளாட்பார்ம்ல டிக்கெட் வச்சு வித்துட்டு இருந்தீங்க பிளாக் டிக்கெட் வித்துட்டு வந்தீங்க இன்னைக்கு உங்களுக்கு என்னவோ ஜனநாயகத்தினுடைய ஒரு வலிமையின் காரணமாக பிளாக் டிக்கெட் வித்தவன் இன்னைக்கு சட்டமன்றத்தில் உட்கார்ந்துட்டு இருக்கீங்க. இவர்களுடைய தியாகம் என்ன.?
ஓராண்டு காலம் எங்களுடைய தலைவர் மிசா கைதியாக சிறைசாலையில் இருந்தார். ஒரு முதலமைச்சருடைய பையனான அவருக்கு சல்யூட் அடிச்ச போலீஸ்காரங்க பூட்ஸ் காலால் எட்டி உதைக்கிறாங்க அடிக்கிறாங்க. சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தார். இந்த வரலாறு யாருக்காவது இருக்கா? உனக்கு என்ன வரலாறு இருக்கு.? நீ என்ன தியாகம் பண்ணிட்டு இன்னைக்கு அரசியலுக்கு வந்திருக்கற.? வெக்கங்கட்ட முதலமைச்சர் திரு விஜய் அவர்களே மானங்கெட்ட முதலமைச்சர் திரு விஜய் அவர்களே உங்களுக்கு கொஞ்சமாவது சூடு சொரணை ரோஷம் எதனா இருந்தா எங்களுடைய எதிர்கட்சி தலைவர் 15 கேள்வி கேட்டார் அதற்கு பதில் சொல்லு. ஸ்ரீவைகுண்டத்தில உன்னுடைய கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தப்பு செய்திருக்கிறார் என்ன பதில் அதுக்கு.? உங்களுடைய கட்சிக்காரர்கள் எல்லாம் கஞ்சா கடத்துறாங்க. வேதாரண்யத்தில உங்களுடைய ஒன்றிய செயலாளர் கஞ்சா கடத்தி படகுல இலங்கைக்கு அனுப்புறாங்க. அந்த குற்றச்சாட்டு பத்திரிக்கைகளில் வந்திருக்கு அதை கேள்வியாக கேட்டிருக்கிறோம். அதுக்கு என்ன உங்களுடைய பதில்? பாலியல் தொல்லைகள் கொடுத்து ராணிப்பேட்டையை சேர்ந்த உங்க கட்சிக்கார பெண்மணி வந்து உங்களுடைய மாவட்ட செயலாளர் புகார் சொல்லி இருக்காங்களே அதுக்கு எங்க போச்சு உங்களுடைய பதில் எல்லாம்.? இந்த பதில் சொல்றதுக்கே உங்களுக்கெல்லாம் யோக்கியதை இல்லாம இதை சொல்றதுக்கு உங்களுக்கு கொஞ்சம் கூட தைரியம் இல்லாம தொடைநடங்கி முதலமைச்சர் கொஞ்சமும் கூட வெட்கமும் இல்லாம கூச்சமும் இல்லாம எதிர்கட்சி தலைவர்கள் எல்லாம் கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலே சொல்லாம இன்னைக்கு ஓடு ஓடு ஓடுன்னு ஓடி இருக்கீங்களே, நான் கேட்கிறேன் கரூர்ல 41 பேர் உயிர் இருந்தாங்க இல்லையா அது எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் உங்களுக்கு இருந்ததா? அதுல புடிச்சு உங்களை உள்ள போட்டுருந்தாங்களா சிறைவாசனம் என்னன்னு தெரிஞ்சிருக்கும். அந்த கரூர்ல கீழ விழுந்து மயங்கி செத்து கிடக்கிறாங்க. அதை கூட நீ கவனிக்காம பஸ் மேல ஏறி நின்னு பாட்டு பாடிய சைக்கோ தான் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள். மக்கள் மயங்கி கீழ விழுது சாகுறாங்க அதை பார்த்தும் கூட பார்க்காதது போல பாட்டு பாடி பிரச்சாரம் செய்த சைக்கோ விஜய்க்க எல்லாம் தமிழ்நாட்டினுடைய தியாக வரலாறை பத்தி தெரியாது. எங்களுடைய தலைவருடைய மிசா தியாகத்தை பத்தி தெரியாது. சர்காரியா கமிஷன் என்று 1970ல போட்ட கமிஷனுக்கும் 2026- 27 போலீஸ் டிமாண்டுக்கும் என்ன சம்பந்தம் கொஞ்சமாவது மூளை இருக்கா உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது உங்களுக்கெல்லாம் உங்களுக்கு தெளிவு இருக்கா? நீங்க எதை நோக்கி போயிட்டு இருக்கீங்க? காவல்துறை மானியம்னா என்ன? காவல்துறையில நான் இத சாதிச்சிருக்கிறேன். நீங்க கேட்ட கேள்விகள் எல்லாம் இது. இதுக்கு பதில் நான் புதிதாக அறிவிப்பு கொடுக்கிறேன். காவல்துறையை நான் மேம்படுத்துறேன். காவல்துறைக்கு இந்த இந்த வசதிகளை செய்து கொடுக்கிறேன் அப்படின்னு சொல்றத விட்டுட்டு அதை பத்தி எதுவுமே பேசாம எல்லாமே திராவிட முன்னேற்ற கழகம் திராவிட முன்னேற்ற கழகம் உனக்கும் பிஜேபிக்கும் என்ன வித்தியாசம்.? பிஜேபி ஆட்சிக்கு வந்து 15 ஆண்டு காலம் நேரு நேரு நேரு காங்கிரஸ். இன்னைக்கு அந்த காங்கிரஸ் உன் கூட வச்சிருக்க ஈடி எஐஆர் எடுத்து காட்டுறியே உன் பக்கத்திலேயே இருக்கிற காங்கிரஸ் உன் கண்ணு முன்னாடி தெரியலையா ஈடி எடுத்து காட்டும் போது காங்கிரஸ்க்கு இல்லாத ஈடி எப்ஆர் கண்ணாடி முன்னாடி நின்னு உங்களுடைய முகத்தை பார்த்தா அந்த ஊழல் எல்லாம் புறையோடி இருக்கிறது உங்க கண்ணுக்கு தெரியாதா? இதையெல்லாம் வசதியா மறைச்சிட்டு என்னமோ நீங்க வந்து நாட்டு மக்களுக்கு நீங்கதான் பெரிய கருத்துக்களை சொல்ற மாதிரி, அதுல சபாநாயகர் உங்களுக்கு நான் வாய்ப்பு தரேன் அப்படின்னு சொல்லிட்டு எங்க இருந்து ஒரு துண்டு சீட்டு வந்த பிறகு வாய்ப்பு மறுக்கிறது.
நீங்க காசு போட்டு மேடை போட்டு திமுகக்காரனை திட்டுங்க, நாங்க பதில் சொல்றோம். மக்களுடைய வரிப்பணத்தில் நடக்கக்கூடிய சட்டமன்றத்தில் ஒவ்வொரு மணி நேரமும் மக்களுடைய வரிப்பணத்தில் நடக்கக்கூடிய சட்டமன்றம் உங்களுக்கு ஏசி அலவன்ஸ் நீங்க உட்காரத்துக்கு படி எல்லாம் கொடுக்குறாங்க. அப்படி மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுகிற சட்டமன்றத்தில் கவர்னன்ஸ் பேசணும். அரசு பற்றி பேசணும், ஆட்சியைப் பற்றி பேசணும். மக்களுக்கான திட்டத்தைப் பற்றி பேசணும். திமுகவ திட்டறதுக்கு எதுக்கு சட்டமன்றம்.? நீ மேடை போட்டு திட்டலாம்ல எதுக்கு மக்கள் மக்கள் வரிப்பணத்தை நீங்க வந்து வீணடிக்கிறீங்க.
நிர்மல் குமார் அவர்களே மிஸா சட்டம்ன்றது வேற நீ சொல்ற குண்டாஸ் என்றது வேற. நான் சொல்லித்தரேன் உனக்கு. குண்டாஸ்லதான் மொள்ளமாரி , முடிச்சவிக்கு , கேப் மாரி பாலியல் குற்றங்கள், சாராய கடத்தல் இந்த வழக்குல குண்டாஸ்ல போடுவாங்க, ஒருவேளை நீ எங்கயாவது குண்டாஸ்ல இருந்தியானு தெரியல அந்த எக்ஸ்பீரியன்ஸ் இங்க கொண்டாந்து கொட்டறியானு எங்களுக்கு தெரியல. குண்டாஸ் வேற மிஷா வேற, திருட்டு சர்டிபிகேட் வாங்கினு வந்த திரு நிர்மல் குமார் அவர்களே ஒன்னு சட்டம் தெரிஞ்சு பேசு இல்லன்னா சட்டத்துறை மந்திரி விட்டு வெளிய போய் இருக்கவே இருக்கு என் தொகுதிக்கு பக்கத்துல பைத்தியக்கார ஆஸ்பத்திரி அங்க வா அட்மிட் பண்றேன் உன்னை நான் நல்லா பார்த்துக்கிறேன். உன்னை நல்லா ட்ரீட்மென்ட் கொடுத்து நீ நல்லா இருந்தா உன்ன மறுபடியும் மந்திரி பதவிக்கு அனுப்புறோம் இல்லன்னா உன்ன அங்கேயே ஒரு சங்கிலி போட்டு கட்ட வைக்கிறோம். நிர்மல் குமார் பேசும் டோன் பிஜேபி டோன் ஆர்எஸ்எஸ் டோன். நிர்மல் குமார் இடம் மாறலாம் ஆனால் காக்கி ட்ரவுசர் மாறாது.
