சென்னை – 11 நவம்பர், 2026 மத்திய உள்துறை அமைச்சகம், 2026 அக்டோபர் 2 முதல் 31- ம் தேதி வரை சிறப்பு இயக்கம் 6 மூலம், தூய்மை, குறைதீர்ப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதலின்படியும், ஒருமாத காலமாக அலுவலக மேலாண்மை, நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வுகாணுதல், பொதுமக்கள் குறைதீர்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 6,757 இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இது விரிவுபடுத்தப்பட்டு 7,963 இடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வந்த 147 குறிப்புகள், மாநில அரசுகளிடம் இருந்து வந்த 141 குறிப்புகள், 11,092 பொதுமக்களின் குறைகள், 1666 மேல்முறையீடு ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2.19 லட்சம் அசல் கோப்புகள், 30,385 மின்னணுக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயனற்ற பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 10.17 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், இதில் மின்னணுக் கழிவுகள் விற்பனை மூலம் மட்டுமே ரூ. 2.63 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
