hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சீரமைப்பு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட  பெரியார் காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் குப்பை, சகதியாக அடைபட்டு தண்ணீர் செல்ல வழியில்லாமல் பொதுமக்களுக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் நோய்பரப்பும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வந்தது. இதனையடுத்து கழிவுநீர் செல்லும் வாய்க்காலை சரிசெய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் குப்பைகூளங்கள் சகதிகள் அகற்றப்பட்டு கழிவுநீர் தேங்காமல் சீராக செல்வதற்கு சீரமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கழிவுநீர் செய்வதற்கு நிரந்தரமாக வாய்க்கால் அமைக்கப்படும் என்று காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »