hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் முடுவார்பட்டி ஊராட்சியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தினர்….

கொரானா என்னும் நோய் பெருந்தொற்றை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி உட்பட பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் தமிழகம் முழுவதும் 7ம் கட்டமாக தடுப்பூசி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் தலைமையில்  நடைபெற்றது.

உயர்நிலைபள்ளி, உட்பட பொது இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.  மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி மற்றும் பணியாளர்கள்வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

இதில் வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலா முடுவார்பட்டி சுகாதார நிலைய மருத்துவர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாகக் பணியாற்றிவரும் ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி, பணியாளர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »