hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலராக தாஜ்நிஷா பொறுப்பேற்பு..

திருப்பூர் மாவட்டம் கணியூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த தாஜ்நிஷா பணிமாறுதல் பெற்று மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிகளை துவங்கினார்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த முகமது ரபீக் என்பவர் பணி மாறுதல் பெற்று மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிகளை துவக்கினார். 

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட டீ கல்லுப்பட்டி பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு சக பணியாளர்கள் அலுவலர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »