hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி அரசு ஆணையின்படி பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் உத்தரவின் பேரில் சோழவந்தான் பேரூராட்சியில் விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மோகோல் குடிநீர் பாக்கெட்டுகள், அன்பளிப்பு பிளாஸ்டிக், அலங்கார உரைகள் மற்றும் பிளாஸ்டிக் சீட்டுகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது. துணிப்பைகளை பயன்படுத்தி ஒத்துழைப்பு தரவேண்டும் மீறுபவர்களுக்கு அரசு ஆணையின்படி அபராதம் விதிக்கப்படும் என்று சோழவந்தான் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »