hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டு கடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரேசன், மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் ராஜாமணி, அடக்கி வீரனன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் குமார் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தியும், தொடர்ந்து ஆலை இயங்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்க கோரியும், அரவை செய்தவுடன் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »