hello madras mobile banner 1200x300

புதுவண்ணாரப் பேட்டையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கிய 4 நபர்கள் கைது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, அம்மனியம்மன் கோயில் 6 வது தெருவில் வசித்து வரும் பார்த்தசாரதி, வ/27 என்பவர் புதுவண்ணாரப் பேட்டை, கேப்டன் மஹால் சந்து அருகே மது அருந்திக் கொண்டிருந்த போது, பார்த்தசாரதியின் நண்பர் மணிகண்டன் என்பவர் அவரது 4 நண்பர்களுடன் மது அருந்த வந்திருந்தார். அப்பொழுது பார்த்தசாரதியும், மணிகண்டனும் பேசிக் கொண்டிருந்த போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்ட நிலையில், மணிகண்டன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, பார்த்தசாரதியை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.  இரத்தக் காயமடைந்த பார்த்த சாரதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து, H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.சிவா, வ/24, த/பெ.ராஜன், அஜிஸ்நகர் 3வது தெரு, தண்டையார் பேட்டை, 2.பென்சிலய்யா, வ/23, த/பெ.மோகன கிருஷ்ணன், காமராஜர் 5வது தெரு, கொருக்குப்பேட்டை, 3.சுரேஷ், வ/25, த/பெ.பென்சிலய்யா, ஜெ.ஜெ.நகர் 5வது குறுக்குதெரு, கொருக்குப்பேட்டை, 4.மோகன், வ/22, த/பெ.குமரேசன், துர்காதேவி நகர் 2வது தெரு, தண்டையார்பேட்டைஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.

 விசாரணையில் எதிரிகள் சிவா மீது 3 அடிதடி உட்பட 5 குற்ற வழக்குகளும், பென்சிலய்யாமீது 1 கொலைமுயற்சிஉட்பட 2 குற்றவழக்குகளும், சுரேஷ்மீது   1 வழிப்பறிஉட்பட 2 குற்றவழக்குகளும் மோகன் மீது 4 அடிதடி உட்பட 6 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள முக்கிய எதிரி மணிகண்டன் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட எதிரிகள் நால்வரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »