சென்னை – 14 நவம்பர், 2026 புது தில்லியில் உள்ள ரயில் பவனில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவுக்கு விளக்கேற்றி, மலர்தூவி மரியாதை செலுத்தி பழங்குடியினர் கௌரவ தினத்தை ரயில்வே அமைச்சகம் இன்று (நவம்பர் 13, 2026) அனுசரித்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகவான் பிர்சா முண்டாவின் மகத்தான பங்களிப்பும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அவரது வீரமிக்கப் போராட்டமும் நினைவுகூரப்பட்டன. மேலும், பழங்குடியின சமூகங்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நலனைப் பாதுகாப்பதில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பும் போற்றப்பட்டது.
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும், இந்தியாவின் வளமான பழங்குடியினப் பாரம்பரியத்தின் மீதான மரியாதை, ஒற்றுமை மற்றும் தேசியப் பெருமிதத்தை வலுப்படுத்தும் வகையிலும் பழங்குடியினர் கௌரவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே வாரிய உறுப்பினர்கள், தலைமை இயக்குநர்கள், வாரியச் செயலாளர் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
