hello madras mobile banner 1200x300

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக போட்டிகளில் அசத்தல்..

தேவகோட்டை  – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக அவ்வை அறம் காக்கும் மன்றம் நடத்திய குழந்தைகள் தின விழா போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசினை பெற்று அசத்தினார்கள்.

 இணையம் வழியாக திருவள்ளூர் மாவட்டம் அவ்வை அறம் காக்கும் மன்றம் குழந்தைகள் தின விழாவை நடத்தியது. இந்நிகழ்வில் அவ்வையார் பாடல்களையும், அப்துல்கலாமின் பத்து அறக்கட்டளைகளையும் மாணவர்கள் எடுத்துக் கூறினார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கு பெற்ற மாணவர்களில் இப்பள்ளி  மாணவிகள் ஹனிஷ்கா , தேவதர்ஷினி, திவ்யஸ்ரீ  ஆகியோர் முதல் பரிசைப் பெற்றனர்.

இப்பள்ளியில் இருந்து மட்டும் சுமார் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களை இணையம் வழியாக தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம்,  ஆசிரியர்கள் முத்துலட்சுமி , செல்வம்மீனாள் , ஸ்ரீதர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விரைவில் இவர்களுக்கு அவ்வை அறம் காக்கும் மன்றத்தின் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியை ஒருங்கிணைத்த அவ்வை அறம் காக்கும் மன்ற  நிர்வாகி சாந்தகுமாரி,  அபிலாஷ் ,சிவலெட்சுமி ஆகியோருக்கும்  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »