சென்னை 29, அக்டோபர் 2026: தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய 17 கைதி களில், மீதமிருந்த 2 பேரும் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அமைச்சியாப்புரம் மலைப்பகுதியில் பதுங்கிய கைதிகளை ட்ரோன் மூலம் கண்கா ணித்த போலீசார் மேலும் 2 பேரை பிடித்தனர். நேற்று வரை 13 பேர் பிடிக்கப் பட்ட நிலையில், மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய 17 ¬ கதிகளில் முதலில் 4 பேர் பிடிபட்டனர். பின்பு நேற்று 9 பேர் பிடிபட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் சிக்கியுள்ளனர்.
தப்பிய கைதிகள் அருகில் உள்ள மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் பதுங்கிய நிலையில் அவர்களைப் பிடிக்க 17-க்கும் மேற்பட்ட தனிப்படை கள் அமைக்கப்பட்டு, ட்ரோன்கள் உதவி யுடன் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது. நேற்றைய தினம் 13 கைதிகள் பிடிபட்ட நிலையில், இன்று மேலும் 2 பேர் சிக்கியுள்ளனர்.
தற்போது பிடிபட் டுள்ளவர்கள் மதுரை யைச் சேர்ந்த பொன். முத்துச்செல்வன் மற்றும் கன்னியாகுமரி மாவட் டத்தைச் சேர்ந்த ரெஜின் ஆகியோர் கைது செய்யப்பட் டுள்ளனர். இதுவரை 15 கைதிகள் பிடிக்கப் பட்டனர். இந்த நிலையில் மீதமிருந்த 2 பேரும் கூடலூர் காவல் நிலையத்தில் சரண டைந்தனர்.
மதுரையைச் சேர்ந்த சகோதரர்களான திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் காவல் நிலை யத்தில் சரணடைந் ததைத் தொடர்ந்து, சிறை யிலிருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிபட் டுள்ளனர்.
