hello madras mobile banner 1200x300

தும்மக்குண்டு கிராமத்தில் மது விற்ற ஒருவர் கைது- 50 மதுபாட்டில்கள் பறிமுதல்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சட்டவிரோதமாக லாப நோக்கத்துடன் மது விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் வருஷநாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் அருண் பாண்டி மற்றும் காவலர்கள் ராஜபாண்டியன் சந்திரசேகர் ரவிவர்மா ஆகியோர் அப்பகுதியில் சோதனையிட்டபோது தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த வீரன தேவர் மகன் பஞ்ச ராஜா என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருஷநாடு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் அருண் பாண்டி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் உடன் சக காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர் ரஞ்சித் உடனிருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »