கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (10.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “இந்தியக் குடியரசுக் கட்சி”யின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், Ex.M.L.A அவர்கள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் – தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார்.
அதுபோது கழக பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
