hello madras mobile banner 1200x300

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது நிலங்களில் பட்டா மாறுதல் மற்றும் யூ.டி.ஆர் திருத்தம் மாறுதல் செய்வதற்கான சிறப்பு முகாம்….

திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில்  மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது நிலங்களில் பட்டா மாறுதல் மற்றும் யூ.டி.ஆர் திருத்தம் மாறுதல் செய்வதற்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடக்கும் மனுநீதி நாள் முகாமில் அதிகப்படியான மனுக்கள் பட்டா மாறுதல் மற்றும் யூ.டி.ஆர் திருத்தத்திற்கான மனுக்கள் பொதுமக்கள் வழங்கி நிலையில் அந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு இன்று பொதுமக்களுக்கு பட்டா மாறுதலுக்கு யூ.டி.ஆர் திருத்தம் செய்ய தனி முகாம் நடத்தி வருகின்றனர். எனவே முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »