திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை 09.09.2026 அன்று திருப்பதி திருக்குடை
பாதயாத்திரை ஊர்வலத்தை நடத்த உள்ளனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள
உள்ளார்கள். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கீழ்க்கண்ட
இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
- காலை 08:00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை
என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில்
வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா
சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும்
பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம். - மாலை 03:00 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை
வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல
அனுமதியில்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட்
வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். மேலும்,
ஈ.வெ.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளைப்
பயன்படுத்தலாம். - திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்க வரும்போது
சூளை ரவுண்டானாவிலிருந்து டிமோலோஸ் சாலை நோக்கிச் செல்ல
அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா
முத்தையா சாலை வழியாகச் செல்லலாம். - திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி
பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதியில்லை.
அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். - திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது
நாராயணகுரு சாலை / ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை
நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி
நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். - திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது,
பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல
அனுமதியில்லை. - திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது,
டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல
அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாகச்
செல்லலாம். - திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ்
சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கிச்
செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை
வழியாகச் செல்லலாம். - திருப்பதி திருக்குடை ஊர்வலம் கொன்னூர் ஒன் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது,
ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் ரோடு மற்றும் ICF சந்திப்பு ஆகிய
இடங்களிலிருந்து கொன்னூர் ஒன் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள்
கீழ்கண்டவாறு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும்.
ஓட்டேரி பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் குக்ஸ் ரோடு வழியாக மாற்றி
விடப்படும்.
ICF சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி ரோடு வழியாக மாற்றி
விடப்படும்.
மேடவாக்கம் டேங்க் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் M.T சாலை மற்றும்
V.P.காலனி சந்திப்பில் இருந்து V.P காலனி (தெற்கு) நோக்கி மாற்றி
விடப்படும்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
