hello madras mobile banner 1200x300

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சின்னகரட்டுப்பட்டியில் உள்ள வி.ஆர்.ஜி ராமசாமி செட்டியார் – காளியம்மாள் நினைவாக ஜி.ஆர்.பி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மதுரை அரவிந்த கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் உறுப்பினர்களோடு ஒட்டன்சத்திரம் வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர்களான தணிகாசலம், ராஜசேகர், ஒட்டன்சத்திரம் எவர் கிரின் சிட்டி கிளப் கங்காதரன், பட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் பொன்.கார்த்திக், ஜி.ஆர்.பி குழுமம் சரவணன், ஷீலா பல் மருத்துவமனை டாக்டர். நந்தகோபல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான கண் பரிசோதனை பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் மேலும் கண் பரிசோதனை செய்து கொண்ட அனைவருக்கும் குறைந்த விலையில் கண்ணாடி மற்றும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. கண்புரை நோய் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »