hello madras mobile banner 1200x300

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி கிராமத்தில் அமைந்துள்ள வராஹி வனத்தில் உலக மக்கள் நலனுக்காக மஹாயாகம்….

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி கிராமத்தில் அமைந்துள்ள தலைக்குத்து என்னும் வராஹி வனத்தில் திருநல்காசி பரிகார புண்ணியஸ்தலத்தில் விருப்பாட்சா ஈஸ்வரர் ஆலயத்தில் உலக மக்கள் நலனுக்காகவும், உலக மக்கள் இந்தியாவின் இறையாண்மையை நேசிக்க வேண்டியும், கொடிய கொரோனா வைரஸ்சையும் அழிக்க வேண்டியும் சித்தர்களின் கூற்றுப்படி சிவசக்தி மந்திரங்கள் முழங்க முதன்மை சித்தர் அகத்தியர் மற்றும் இயேசு, முகமது நபிகள், புத்தர் இன்னும் ஏராளமான சித்தர்களின் காயத்ரி மந்திரம் உச்சரித்து யாகத்தை மகிமை செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிவனடியார் விருப்பாட்சி கே.மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் சிவனடியார் சாமியார்புதூர் ஏ.ஈஸ்வரன் சிவனடியார், பன்னீர் செல்வம், நாராயணன், வடிவேல், சிவராஜ், நேரு அம்மாள், புஷ்பா, முருகாயி, இந்திரா இன்னும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அவரவர் குலதெய்வம் மூதாதையர் இஷ்ட தெய்வங்கள் வேண்டிக்கொண்டு யாகத்தில் நவதானியம் கனி வகைகள் அவுல், சக்கரை என ஏராளமான பதாப்தங்களை கொடுத்து ஊழ்வினை மற்றும் சாப, பாவம் நீங்கி தானும் தன்னுடைய சந்ததியினரும் சகல ஐஸ்வரியங்களையும் பெற்றிட வேண்டிக்கொண்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருநல்காசி மிஷன் அறக்கட்டளையும் மற்றும் ஸ்ரீநல்காசி தர்மஸ்தல அறக்கட்டளையும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். அறக்கட்டளையின் மேனேஜிங் டைரக்டர் திருப்பணித் தொண்டன் சாது எஸ்.கே.ரவிக்குமார் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதாம் வழங்கி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »