hello madras mobile banner 1200x300

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது….

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆணைக் கிணங்க உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் படியும்,  கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து    தலைமையிலும் , ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி செல்லமுத்து , ஜென்ஸி செல்வராஜ் , ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் காளீஸ்வரி காளிமுத்து, ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி ஆகியோர் இடையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்வை கண்டு இடையகோட்டை ஊர் பொதுமக்களும் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் இடையகோட்டை ஊராட்சி மன்றத்தை வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »