தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு
சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி
செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஏற்கனவே கடந்த
16.09.2026ம் தேதி தமிழ்நாடு பள்ளி கல்விதுறை முன்னாள் அமைச்சர் திரு,அன்பில்
மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக்,
அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர்களுக்கு சொந்தமான திருச்சி, சென்னை
ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலங்களில் சோதனை செய்து ஆவணங்கள்
மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரி முத்துகுமார் தனியார்
பள்ள நிர்வாகிகளிடம் மோசடி செய்து பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்து
அவரது உறவினரான சரவணன், ரமேஷ் மற்றும் கோகுலகிருஷ்ணன் ஆகியோரது
கள்ளக்குறிச்சியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டு
30க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று (29.09.2026) சென்னை பெருநகர மத்திய
குற்றப்பிரிவு போலீசாரால், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பி.டி.அரசகுமார் மற்றும்
தலைமறைவு எதிரி முத்துகுமாரின் உறவினர் மற்றும் திரு,அன்பில் மகேஷ்
பொய்யாமொழியின் உதவியாளர்களுக்கு சொந்தமான சென்னை சாலிகிராமம்,
கோடம்பாக்கம், சூளைமேடு, பூவிருந்தவல்லி மற்றும் நாவலூர் ஆகிய 5 இடங்களில்
உள்ள வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வழக்கு சம்மந்தப்பட்ட 44
ஆவணங்கள் மற்றும் 1 Laptop ஆகியவற்றை கைப்பற்றியுள்ளார்கள்.
இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
