hello madras mobile banner 1200x300

சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில், வளசரவாக்கம் தனியார் பள்ளியில், சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டது

சென்னை – 12 நவம்பர், 2026 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் அவர்களின்‌‌ உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர், அவர்களின் அறிவுரையின்பேரில், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் K.உஷாராணி தலைமையில் இன்று (11.11.2026‌) காலை சென்னை, வளசரவாக்கம், சௌத்ரி நகரிலுள்ள Our Angel Matriculation பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு, இன்ஸ்டாகிராம், முகநூல், X தளம், Snapchat மற்றும் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், சைபர் ஸ்டாக்கிங் (இணையவழி பின்தொடர்தல்) ஃபிஷிங் (மோசடி இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை திருடுதல்), சைபர் புல்லிங் (இணையவழி துன்புறுத்தல்) பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடி, கடன் செயலி மோசடி, பரிசு மோசடி, கூரியர் மோசடி உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் இதரஇணையவழி மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மாணவிகள் பாஸ்வேர்டு, OTP, CVV எண், வங்கிக்கணக்கு எண், தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், வீடு மற்றும் பள்ளி முகவரி மற்றும் பிற முக்கிய விவரங்களை தேவையில்லாமல் சமூக வலைதளங்களிலோ, இணையத்திலோ யாருடனும் பகிராமல் பாதுகாப்புடன் கையாள்வது குறித்தும் அறிவுரைகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

மாணவிகள் சைபர் துன்புறுத்தல், மிரட்டல் அல்லது இணையவழி மோசடியை எதிர்கொண்டால் உடனடியாகப் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அல்லது பெற்றோர்கள் உதவியுடன் சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்வது மற்றும் www.cybercrime.gov.in என்ற National Cyber Crime Reporting Portal மூலம் புகார் அளிப்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவிகளின் பங்கேற்பை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.

Read the full e-paper

Translate »