hello madras mobile banner 1200x300

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குற்றபின்னனி உடைய மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என285 நபர்களை பிடித்து, விசாரணை செய்து, 152 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ், இ.கா.ப
அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி உடைய
மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா
நகரமாக மாற்ற, அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி
மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள்
மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல்குழுவினர்கள், அந்தந்த காவல் நிலைய
எல்லைகளில் சிறப்பு சோதனைகள் (Special Drive) மேற்கொள்ளப்பட்டு
குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்
உத்தரவின் பேரில் சென்னையில் குற்ற பின்னனி உடைய மற்றும் சரித்திர
பதிவேடு பாராமரிக்கப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு எதிராக நேற்று
(10.09.2026) இரவு முதல் இன்று (11.09.2026) மாலை வரை சென்னை பெருநகர
காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில்,
வடக்கு மண்டலத்தில் 108 நபர்களும், மேற்கு மண்டலத்தில் 38 நபர்களும், தெற்கு
மண்டலத்தில் 94 நபர்களும், கிழக்கு மண்டலத்தில் 45 நபர்களும் என மொத்தம்
285 குற்ற பின்னனி உடைய மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது
செய்யப்பட்டனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்ற பின்னனி உடைய மற்றும் சரித்திர
பதிவேடு ரவுடிகளில் 152 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மற்ற நபர்களை விசாரணைக்கு பிறகு, இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில்
ஈடுபட கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு
சோதனைகள் மேற்கொண்டு, மேலும் சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும்
வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
அவர்கள் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »