hello madras mobile banner 1200x300

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில்நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களிடம் 60புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ்,
இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்
ஆணையரகத்தில் தினந்தோறும் பொதுமக்கள் குறை தீர் முகாமில்,
காவல் உயரதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று
உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு
பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று (02.09.2026) புதன்கிழமை காலை, காவல்
ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில்,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்
A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு
பொதுமக்களிடமிருந்து 60 புகார் மனுக்களை பெற்று அவர்களின்
குறைகளை கேட்டறிந்து விரைந்து உரிய விசாரணை மேற்கொண்டு
நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »