சென்னை 16, அக்டோபர் 2026: 2026:உலகளாவிய ஆற்றல் தொழில் நுட்ப முன்னணியாள ரான ஸ்னைடர் எலக் ட்ரிக், தென்னிந்தியா வில் ‘சர்வீசஸ் எக்ஸ் பிரஸ்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தனது நடமாடும் சேவை இன்னோவேஷன் மையத்தை 5 மாநிலங் கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நகரங் களுக்கு 120-க்கும் மேற் பட்ட நாட்களில் கொண்டு செல்ல வுள்ளது. பெங்களூரு வில் தொடங்கும் இந்த முயற்சியானது, ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சேவை நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பங்களை இப்பகுதியில் உள்ள தொழில் துறை சந்தைகளுக்கு அருகில் கொண்டு சேர்க்கும். மேலும், முக்கியமான மின்சார சொத்துகளுக் கான (எலக்ட்ரிக் அஸெட்ஸ்) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சா ர்ந்த கண்காணிப்பு, சாதனங்களின் செயல் பாட்டு நிலையை அடிப் படையாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் ஆயுட்கால தீர்வுகள் ஆகியவற்றின் நேரலை செயல்முறை விளக்கங் களையும் வழங்கும்.
பெங்களூருவில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய ஸ்னைடர் எலக்ட்ரிக் இந்தியாவின் சேவைப் பிரிவு துணைத் தலைவர் திருமதி. தாமினி சவுத்ரி, “சர்வீசஸ் எக்ஸ்பிரஸ் என்பது எங்களது சேவைத் திறன்களைத் தொழில்துறைக்கு மிக அருகில் கொண்டு செல்லவும், நிஜ உலக செயல்பாட்டுச் சூழல் களில் அவற்றின் முக்கியத்துவத்தை நிரூபிக்கவும் எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது. செயல் பாட்டு நிலை சார்ந்த பராமரிப்பு, டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் ஆயுட்கால சேவை களை ஒருங்கிணைப் பதன் மூலம், நிறுவனங் கள் தங்களின் முக்கிய மான மின்சார சொத்து களை எவ்வாறு முன் கூட்டியே நிர்வகிக் கலாம், நம்பிக்கைத் தன்மையை மேம்படுத்த லாம் மற்றும் எதிர்பா ராத செயல்பாட்டு முடக்க நேரத்தைக் குறைக்கலாம் என் பதைப் புரிந்துகொள்ளச் செய்வதே எங்களது நோக்கமாகும்,” என்று கூறினார்.
சர்வீசஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரவு மையங்கள் (டேட்டா சென்டர்ஸ்), தொழிற் துறைகள், கட்டிடங்கள், மின் கட்டமைப்புகள் (கிரிட்ஸ்) மற்றும் பிற முக்கியப் பிரிவுகளுக் கான தொழில்நுட்பங் கள், தீர்வுகள் மற்றும் நிபுணத்துவத்தை ஒருங் கிணைத்து, வாடிக்கை யாளர்கள் தங்களது மின்சார சொத்துகளை அவற்றின் முழு ஆயுட் காலத்திலும் எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க லாம், நவீனப்படுத்த லாம் மற்றும் மேம் படுத்தலாம் என்பதை நேரடியாகக் காட்டு கிறது. இதன் நடமாடும் வடிவம், இந்தத் திறன் களைத் தொழில்துறை மையங்களுக்கு நேரடி யாகக் கொண்டு சென்று, நிறுவனங்கள் அதன் சேவை நிபுணர் களுடன் கலந்துரை யாடவும், தங்களது செயல்பாட்டுச் சூழல் களில் இதன் பயன்பாடு களை நேரில் ஆராயவும் ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது. சர்வீசஸ் எக்ஸ்பிரஸ் கர்நாடகா, கேரளா, தெலங்கானா, தமிழ் நாடு மற்றும்ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநி லங்களில் 120-க்கும் மேற்பட்ட நாட்களில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பயணம் செய்து, தென்னிந்தியா வின் முக்கியத் தொழில் துறை சந்தைகளுக்கு ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சேவைத் திறன்களை நேரடியாகக் கொண்டு செல்லும்.
