hello madras mobile banner 1200x300

கோவை கிணத்துக்கடவு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரி விவசாயிகள் பாதிப்பு

கோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோவிந்தநாயக்கனூர், வீரப்பகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கல்குவாரியில் விவசாய நிலங்கள்,நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாலும்,வெடிவைத்து பாறைகளை தகர்க்கும்போது வீடுகளுக்கும்,பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதை விவசாயிகள் கேட்கச்சென்றபொழுது கல்குவாரி உரிமையாளர்கள் குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும்,விவசாயிகள்முற்றுகையிட்டனர். அங்கு சென்ற  பாஜக  விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட உதவி ஆட்சியர் நேரில் வந்து இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்தனர்.பின்னர் பொதுமக்கள் களைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »