hello madras mobile banner 1200x300

கொரானா தடுப்பூசி செலுத்துவதில் 80% இலக்கை எட்டிய மதுரை பாலமேடு பேரூராட்சி..

கொரானா நோய் பெருந்தொற்றை ஒழிக்க தடுப்பூசி உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில் தமிழகம் முழுவதும் 7ம் கட்டமாக தடுப்பூசி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாகமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு பேருராட்சியில் செயல் அலுவலர் தேவி தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பாலமேடு உயர்நிலைபள்ளி, வங்கி, உட்பட பொது இடங்களில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக பணியாற்றிவரும் செயல் அலுவலர் தேவி, பேரூராட்சி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »