சென்னை – 4 நவம்பர், 2026 சென்னை 03 நவம்பர் 2026: கோத்ரேஜ் நிறுவனத்தின் ஓர் அங்கமான 'ஹேர் லேப்', வெறுங்கைகளால் அப்ளை செய்யக்கூடிய வகையில் பலமுறை பயன்படுத்தும் டியூப் வடிவத்தில் பிரீமியம் ஹேர் கலரான 'கோத்ரேஜ் ஹேர் லேப் ஸ்மார்ட் பிளாக்' ஷாம்பு ஹேர் கலர் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. ஸ்மார்ட் பிளாக் ஷாம்பு ஹேர் கலர், தலைமுடிக்கு கலர் அடிக்கும் முறையை மிக எளிய சில படிகளாக மாற்றுகிறது. பயனர்கள் தங்கள் கைகளை நீரால் நனைத்துக்கொண்டு, நரைமுடி உள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு காய்ந்த தலைமுடியில் இந்த தயாரிப்பை அப்ளை செய்து, கைகளில் பட்ட 3 நிமிடங்களுக்குள் சோப் போட்டு கைகளைக் கழுவ வேண்டும். வெறும் 15 நிமிடங்களில், 100% நரைமுடி மறைப்புடன் அடர்த்தியான, இயற்கையான கருமை நிறத்தை பயனர்கள் பெற முடியும். இந்த தயாரிப்பு, தலைமுடிக்கு கலர் அடிப்பதை ஷாம்பு அப்ளை செய்வதைப் போல மிக எளிதாக்குகிறது.
ஸ்மார்ட் பிளாக் ஷாம்பு ஹேர் கலர், கையுறைகள் (gloves), பிரஷ்கள் அல்லது கலக்கும் கிண்ணங்களின் (mixing bowls) தேவையை முற்றிலுமாக நீக்குகிறது. இந்த புரட்சிகரமான தயாரிப்பு, மிகச் சிறந்த ஆட்டோ-ஆக்ஸிடேட்டிவ் (auto-oxidative) ஹேர் கலர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இது கோத்ரேஜ் ஹேர் லேப்பின் சொந்த தயாரிப்பான, காப்புரிமை (patent) பெற்ற, பெராக்சைடு மற்றும் அம்மோனியா அற்ற (no-peroxide and no-ammonia) ஃபார்முலாவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் பிளாக் ஷாம்பு ஹேர் கலர், கேலிக் அமிலம் (gallic acid) மற்றும் கற்றாழையின் (aloe vera) நன்மைகளுடன் செறிவூட்டப்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து, கோத்ரேஜ் நிறுவனத்தின் 'ஹேர் லேப்' வணிகத் தலைவர் (Business Head) சமீர் சூர்யவன்ஷி பேசுகையில், "கோத்ரேஜ் ஹேர் லேப் ஸ்மார்ட் பிளாக் ஷாம்பு ஹேர் கலர், ஹேர் கலரிங் குறித்த பார்வையை முற்றிலும் புதிய கோணத்தில் மாற்றியமைக்கிறது. பெராக்சைடு இல்லாத ஃபார்முலாவை உருவாக்குவதற்கு ஹேர் கலர் ரசாயன அமைப்பையே முற்றிலும் புதிதாக மாற்றியமைக்க வேண்டியிருந்தது. கையுறைகளின் தேவையை நீக்கியதன் மூலம், மக்களிடம் இருந்த ஒரு ஆழ்ந்த மனத்தடையை அகற்றி, ஒரு சாதாரண வேலையை பிரீமியம் மற்றும் இயல்பான சுய-பராமரிப்பு நிகழ்வாக (self-care ritual) நாங்கள் மாற்றுகிறோம். நவீன அழகியலின் உச்சகட்ட சொகுசு என்பது வசதியும், மேம்பட்ட கூந்தல் அறிவியலும் தடையின்றி ஒன்றிணைவதுதான் என்பதை எங்களது இந்த புரட்சிகரமான, காப்புரிமை பெற்ற ஃபார்முலா நிரூபிக்கிறது," என்று கூறினார்.
இந்தியாவின் ஹேர் கலர் சந்தை ₹7,000 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் வீட்டிலேயே கலர் அடிப்பதற்கு வசதியான மற்றும் சௌகரியமான வழிகளைத் தேடுவதால் இச்சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. நுகர்வோரின் கருத்துக்கள், எளிதான அப்ளிகேஷன் முறையையே அவர்கள் பெரிதும் விரும்புவதைச் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, தோலில் கறை படிவது மற்றும் அப்ளை செய்த பிறகு சுத்தப்படுத்துவது போன்ற விஷயங்களை எளிமையாக்குவதையே வீட்டிலேயே ஹேர் கலர் பயன்படுத்துபவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஸ்மார்ட் பிளாக் ஷாம்பு ஹேர் கலர், கறை படியாத, கையுறைகள் தேவையில்லாத புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த தேவையைப் பூர்த்தி செய்து, இத்துறைக்கு புதிய அளவிலான எளிமையையும் பிரீமியம் அனுபவத்தையும் கொண்டு வருகிறது.
"ஹேர் கேர் சந்தையின் அடுத்தகட்ட பெரிய வளர்ச்சியாக வசதியுடன் கூடிய, பிரீமியம் கண்டுபிடிப்புகளையே 'ஹேர் லேப்' பார்க்கிறது. இந்த வரிசையில் எங்கள் முன்னணித் தயாரிப்பாக 'ஸ்மார்ட் பிளாக்' ஷாம்பு ஹேர் கலர் திகழ்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, அறிவியலின் சிறந்த அம்சங்களையும் சௌகரியத்தையும் இணைத்து வழங்குவதன் மூலம் புதிய நுகர்வோரை ஈர்ப்பதோடு, வீட்டிலேயே ஹேர் கலர் பயன்படுத்தும் அனுபவத்தையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும்," என்றும் சமீர் சூர்யவன்ஷி மேலும் தெரிவித்தார்.
அறிவியல் பூர்வமான, மூலப்பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அழகுப் பராமரிப்பு தீர்வுகளைத் தேடும் நவீன மற்றும் விவேகமுள்ள நுகர்வோருக்காக வடிவமைக்கப்பட்ட 'ஸ்மார்ட் பிளாக்' ஷாம்பு ஹேர் கலர், பலமுறை பயன்படுத்தக்கூடிய வசதியான டியூப் பேக்கில் கிடைக்கிறது. இதன் 80 மி.லி பேக்கின் விலை ₹229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிங்கிட் (Blinkit), அமேசான் (Amazon) உள்ளிட்ட முன்னணி இ-காமர்ஸ், லைஃப்ஸ்டைல் மற்றும் குவிக்-காமர்ஸ் அழகு சாதனத் தளங்களில் இது கிடைக்கிறது.
