hello madras mobile banner 1200x300

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது…

காஞ்சீபுரம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலவாக்கம்,  உத்திரமேரூர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறுபகுதிகளில் கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட மதூர் கிராமத்தை சேர்ந்த இந்துசேகர் (37), வாலாஜாபாத் தாலுக்கா அஜீத் (23), நசரத்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (21), சித்தனக்காவூரை சேர்ந்த மணிகண்டன் (எ) அண்ணாத்தூர் மணி (36), மணிமங்கலத்தை சேர்ந்த ஏகா ( எ ) ஏகாம்பரம் ( 40 ) ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, 5 பேரை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »